Heavy rain in Velankanni

Advertisment

தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாகத்தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேளாங்கண்ணியில் பல்வேறு இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, பரவை, செருதூர், பொய்யூர், திருப்பூண்டி, பூவைத்தேடி உள்ளிட்ட இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது.