தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பொழிந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மதுரையில் தெப்பக்குளம், ஐராவதநல்லூர், முனிச்சாலை, மதுரை மேல அனுப்பானடி பகுதியில்சூறைக்காற்றுடன் மழை பொழிந்தது.இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது இதனால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவியது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தவிட்டுப்பாளையம், புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, சாம்பல்பட்டி, சிங்காரப்பேட்டை, காரப்பட்டு கிராமங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.