Advertisment

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை! 

Heavy rain in various parts of Tamil Nadu!

Advertisment

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வளிமண்டலகீழடுக்குசுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் அதன்புறநகர்பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக, அடையாறு, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், வடபழனி,புறநகர்பகுதிகளான மதுரவாயல்,வானகரம், திருவேற்காடுபூவிருந்தவல்லி,மேடவாக்கம்ஆகிய இடங்களில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

செம்பரம்பாக்கம்ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ததால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால்,ஏரியில் இருந்துதிறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

வழக்கத்திற்கு மாறாக, சென்னையில் ஜூன் மாதம் கனமழை பொழிந்து வருகிறது. கடந்த 200 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே ஜூன் மாதங்களில் கனமழை பதிவாகியுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

Tamilnadu Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe