Advertisment

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை!

Heavy rain in various parts of Tamil Nadu!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

Advertisment

தலைநகர் சென்னையில் மீனம்பாக்கம், அனகாபுத்தூர், அடையாறு,கோட்டுர்புரம் உள்ளிட்ட இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சேலம், புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கன மழை பொழிந்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட 18 மாவட்டங்களில் 2 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதேபோல் வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரியில் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டில் மறைமலை நகர்,கூடுவாஞ்சேரி, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

heavy rain Tamilnadu weather
இதையும் படியுங்கள்
Subscribe