தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் வெயில் தணிந்து இதமான ஈர காற்று வீசி வருகின்றது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதலே கடுமையான வெயில் நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில் இன்று மாலை முதலே தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்து வருகின்றது. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வந்தவாசி சாலை பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், வி.கைகாட்டி, கீழப்பழுவூர், திருமானூர், உடையார்பாளையம் பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.