heavy rain update tamilnadu chennai meteorological centre Info

வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய இரு மாவட்டங்களில் இன்று (05.11.2023) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்விரு மாவட்டங்களிலும் மிக கன மழைக்கான எச்சரிக்கை என்பதால், 12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும்.

Advertisment

நாளை (06.11.2023) நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 12 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போன்று நாளை மறுநாள் (07.11.2023) நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் (07.11.2023) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment