Published on 09/04/2022 | Edited on 09/04/2022

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும். தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய இடங்களில் கனமழை பொழியும் என அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழக கடலோர பகுதி, மன்னார் வளைகுடாவை ஒட்டிய கடற்பகுதி, தென்மேற்கு குமரிக்கடல், வங்கக்கடல் ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடைக்கானலில் 7 செண்டி மீட்டர் மழையும், சாத்தூர், சேரன்மாதேவி, நெய்வேலி, மீமிசல் ஆகிய இடங்களில் தலா 5 செண்டி மீட்டர் மழையும், கயத்தாறு, குறிஞ்சிப்பாடி, போடியில் தலா 4 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.