1_5.jpg

வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாடுமுழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

Advertisment

4_0.jpg

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை அன்றும் அதற்கு அடுத்த நாளும் மழை ஓய்ந்திருந்த நிலையில், மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. நேற்று (07.11.2021) நள்ளிரவுக்கு மேல் மாநகரிலும், புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய கனமழை பெய்தது.இதனால் குமரன் நகர், பேங்க்ஸ் காலனி விஸ்தரிப்பு, சாரதா அவன்யூ, கொட்டப்பட்டு, புலிவலம், பெட்டவாய்த்தலை, ஜீயபுரம், துவரங்குறிச்சி, உறையூர், குழுமணி லிங்கா நகர், செல்வம் நகர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது.

Advertisment

5_0.jpg

மேலும், விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழையால் கோப்பு கொடியாலம், புலிவலம்பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, நெல் பயிர் விவசாய நிலங்களில் மழை நீர் சூழ்ந்து நெற்பயிர்கள் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முழுவதும் பெய்துவரும் தொடர் கனமழையால் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் கூட பல்வேறு இடங்களில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

2_4.jpg

இதனைத் தொடர்ந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் கோரை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் அப்பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனை மாவட்ட கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.