தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! 

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

heavy rain in  Toothakudi;  tomorrow leave for school and college

இதனால் தமிழகத்தில்சென்னை உள்படபல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் மேலூர்,, திருவாதவூர், ஒத்தக்கடை, சிட்டம்பட்டி, கீழவளவு, கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, நெற்குணம், தெள்ளார், தேசூர், சாலவேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

ஏற்கனவே கனமழை காரணமாகபுதுவையில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தொடர் மழை காரணமாக தூத்துக்குடியில் முன்னெச்சரிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல் கடலூரிலும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

college heavy rain schools tutucorin
இதையும் படியுங்கள்
Subscribe