சென்னை புறநகர் பகுதியில் இடியுடன் கனமழை 

 Heavy rain with thunder in the outskirts of Chennai

கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது பரவலாக மழை பொழிந்து வருகிறது. சென்னையின் வடபழனி, சூளைமேடு, அசோக் நகர், அண்ணாநகர், ராயப்பேட்டை, வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி நகர், மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம், எம்.ஆர்.சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பரவலாக மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை அடுத்துள்ள செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பொழிந்து வருகிறது. செங்கல்பட்டின் வேம்பாக்கம், ஆலப்பாக்கம், நத்தம், திம்மாவரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பொழிந்து வருகிறது. மதுராந்தகம், கருங்குழி, மொறப்பாக்கம்,எல்.எண்டத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை பொழிந்து வருகிறது.

Chennai rain weather
இதையும் படியுங்கள்
Subscribe