அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நெல்லை, தென்காசி,கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில்இடியுடன் கூடிய மழையும், சிவகங்கை, ராமநாதபுரம்,விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம், மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மன்னார் வளைகுடா, குமரிக்கடல்,கேரள கடலோரம் மற்றும் லட்சத் தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் குலைச்சல்முதல் தனுஷ்கோடி பகுதிவரை நாளை கடலலைகள் 2.5 மீட்டரில் இருந்து 3 மீட்டர் வரை எழும்பும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.