அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை!   

Heavy rain with thunder in three districts in next 24 hours!

அடுத்த 24 மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இன்று (14.06.2021) கனமழை பெய்யும். நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யலாம். திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறை, அவலாஞ்சியில் தலா 8 சென்டி மீட்டர் மழையும், தேவலாவில் 7 சென்டி மீட்டர் மழையும், கடலூரில் 6சென்டி மீட்டர் மழையும், சின்கோனாவில் ஐந்து சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

heavy rain Tamilnadu weather
இதையும் படியுங்கள்
Subscribe