/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rain 2.jpg)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த நான்கு தினங்களாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, நெல்லை, குமரி, தென்காசி, தேனி, விருதுநகர், கரூர், திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேலே குறிப்பிட்டுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வெளியில் வருவதை தவிர்க்குமாறும், பாதுகாப்பான இடங்களில் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும் வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது.
Follow Us