
தமிழகத்திற்கு அடுத்த ஐந்து நாட்கள் கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் பரவலாக கனமழை பெய்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரை திருக்கோவிலூர், மணலூர்பேட்டை, சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பொழிந்தது. அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூர்,விக்கிரவாண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பொழிந்தது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி,சேவூர்,கண்ணமங்கலம் உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் பரவலாக கன மழை பொழிந்தது. விழுப்புரத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் புகுந்தது. பேருந்து நிலையத்தை மழைநீர் சூழ்ந்ததால் பேருந்துகள் பேருந்து நிலையத்தை விட்டு வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பயணிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)