தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், சேலம், திருப்பத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகசென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை சேலம், திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியில் 13 சென்டி மீட்டர் மழையும், தாளவாடி, ஏற்காட்டில் 8 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.