Heavy rain in Tamil Nadu for next 5 days!

Advertisment

தமிழ்நாட்டில் அடுத்த 5நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் வரும் 21ஆம் தேதிவரை 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (17.07.2021) தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனி, நீலகிரி, கோவை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுராந்தகம், திருத்தணியில் தலா 9 சென்டி மீட்டர் மழையும், சோழிங்கநல்லூர், செய்யாறு, அம்பத்தூரில் தலா 8 சென்டிமீட்டர் மழையும், பெரம்பூர், பூண்டியில் தலா 7 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.