Advertisment

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாகப் பெய்துவரும் நிலையில், நாளை (18.11.2021) சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடப்பட்டிருந்தது. இந்நிலையில், மேலும் மூன்று மாவட்டங்கள் என மொத்தம் 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் மேற்கு நோக்கி நகர்ந்துவரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழ்நாடு இடையே கடந்து செல்லும் என அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்று பிற்பகலில் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.