heavy rain school college leave announcement

கடந்த ஒரு வாரக் காலமாகதமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Advertisment

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கடந்த ஒரு சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (06.07.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர், குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.