தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும்,அதேபோல் நாளை நீலகிரி மற்றும் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.