Advertisment

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை... 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Heavy rain in next three hours ... Warning for 3 districts!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்து 3 மணிநேரத்திற்குமிகக்கனமழை பொழியக்கூடும்எனச்சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழைபொழிந்துவருகிறது. அதிகபட்சமாகஇன்று பிற்பகல் 2.30 மணியளவில்திருவள்ளூரில் 8.5சென்டிமீட்டர்மழைப்பதிவாகியிருந்தது. அதேபோல் காஞ்சிபுரத்தில் 6.2சென்டிமீட்டர் மழையும் பதிவாகியிருந்தது. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கும்எனச்சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணிநேரத்தில்மிகக்கனமழைக்கு வாய்ப்பிற்குஎனச்சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

அதேபோல் சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, கோவை, நீலகிரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chengalpattu kanjipuram rain thiruvalluvar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe