Skip to main content

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை... 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

Heavy rain in next three hours ... Warning for 3 districts!


 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்து 3 மணிநேரத்திற்கு மிகக் கனமழை பொழியக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழைபொழிந்து வருகிறது. அதிகபட்சமாக இன்று பிற்பகல் 2.30 மணியளவில் திருவள்ளூரில் 8.5 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியிருந்தது. அதேபோல் காஞ்சிபுரத்தில் 6.2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியிருந்தது. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணிநேரத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பிற்கு எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

அதேபோல் சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, கோவை, நீலகிரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

பரந்தூர் ஏர்போர்ட்; இரண்டாம் கட்டமாக வெளியான திடீர் அறிவிப்பு!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Notice to acquire land for Parantur Airport

சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் இந்த புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய இருக்கிறது. பரந்தூர் மட்டுமல்லாது, அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பரந்தூர் மக்களின் எதிர்பார்ப்பானது விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, அதேபோல் பூர்வகுடிகளாக இருக்கும் தங்களுடைய வீடுகளையோ, மனைகளையோ எந்த வகையிலும் பாதிக்காத அளவில் விமான நிலையம் வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் அரசாணை கடந்த வருடம் டிசம்பர் மாதம் அரசால் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள சிறுவள்ளூர் கிராமத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 412 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. நிலம் குறித்த பாக்கியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30 ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடாவூரில் நிலம் எடுப்பு அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.