தென்மேற்கு திசையில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் மாலத்தீவு மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசுமென்பதால் மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறித்தியுள்ளது.

Advertisment

weather

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்குவாய்ப்புள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீடாமங்கலத்தில் 4 சென்டி மீட்டர் மழையும், திருவாரூர், அதிராமப்பட்டினத்தில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.