RAIN

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

நாகை, திண்டிவனம், மன்னார்குடியில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.

தற்போது நாகையில் தரங்கம்பாடி, பொறையூர், காளியப்பநல்லூர், ஆக்கூர், திருக்கடையூர் போன்ற இடங்களில் கனத்தமழை பெய்து வருகிறது.

அதேபோல் திண்டிவனம், மயிலம், கூட்டேரிப்பட்டு, செண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் திருவாரூர் மன்னார்குடியில் கோட்டூர், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் போன்ற இடங்களில் கனமழை பெய்துவருகிறது.

Advertisment

கடந்த 24 மணிநேரத்தில் நெல்லைமாவட்டம் செங்கோட்டையில் அதிகபட்சமாக 8 சென்டிமீட்டர் மழையும், மணிமுத்தாறில் 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. பாம்பன், பாபநாசம், திருச்செந்தூர், ராமேஸ்வரத்தில் 5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.