tamilnadu most of districts heavy rains

Advertisment

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு (19.09.2021) பரவலாக மழை பெய்தது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் லால்குடி, புள்ளம்பாடி, கல்லக்குடி, மண்ணச்சநல்லூர், சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்தது. அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழுவூர், மேலப்பழுவூர், வாரணவாசி, வி.கைகாட்டி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்தது.

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, விளமல், தேவகண்டநல்லூர், அடியக்கமங்கலம், குளிக்கரை, அம்மையப்பன் பகுதிகளிலும், நாகை மாவட்டம், வேதாரண்யம், தோப்புத்துறை, அகஸ்தியம்பள்ளி, நெய்விளக்கு, தேத்தாக்குடி பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேபோல், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சித்திலிங்கமடம், புதுப்பாளையம், மெய்யூர் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

Advertisment

அதிகபட்சமாக, தஞ்சாவூர் நெய்வாசல் தென்பாதியில் 9.2 செ.மீ., மதுக்கூரில் 5.3 செ.மீ., பாபநாசத்தில் 4.2 செ.மீ. மழை பதிவானது.