
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த ஒரு மாத காலமாகத்தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில்சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிகக்கனமழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் பல இடங்களில் பலத்த மழை பொழிந்து வருகிறது. சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதியில் கனமழை பொழிந்து வருகிறது. கோயம்பேடு, வானகரம், வளசரவாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், சேலையூர், தாம்பரம், பெருங்களத்தூர், செம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாகக் கனமழை பொழிந்து வருகிறது. அதேபோல் செங்கல்பட்டு பகுதியில் சில இடங்களிலும் கன மழை பொழிந்து வருகிறது.
Follow Us