சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது.

சென்னை மேடவாக்கம், செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், மீனபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், தாம்பரம், போரூர், பெருங்குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

Advertisment

விருகம்பாக்கம், வேளச்சேரி, ராயபுரம், குரோம்பேட்டை அனகாபுத்தூர் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. மதுரவாயல், வளசரவாக்கம்,வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பொழிந்து வருகிறது. வடபழனி, விருகம்பாக்கம்,சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. குரோம்பேட்டையில் அதிகபட்சமாக 6சென்டி மீட்டர்மழை பதிவாகி உள்ளது. தாம்பரத்தில் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளதால் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisment