வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக இடங்களில் மிதமான மழையும், கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் 14 சென்டி மீட்டர் மழையும், சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம்செங்கத்தில் 9 சென்டி மீட்டர் மழையும் பொழிந்துள்ளது.
இந்நிலையில் தற்போது மதுரையில் கனமழை பொழிந்து வருகிறது. மதுரையில் மாட்டுத்தாவணி, ஒத்தக்கடை, அண்ணாநகர், கோரிப்பாளையம், பேருந்து நிலையம், தெப்பக்குளம், வீரகனூர்ஆகிய இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. அதேபோல்மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும்கனமழை காரணமாககன்னியாகுமரி திற்பரப்பு அருவில் நீர் அளவு அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள்குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.