Heavy rain likely in Nilgiris, Coimbatore

Advertisment

நீலகிரி மற்றும் கோவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (13.09.2023) முதல் 18 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்த வரையில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.