Skip to main content

“தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு” - வானிலை ஆய்வு மையம்

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

Heavy rain likely in 10 districts today Meteorological Department

 

தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று (20.11.2023) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

 

நாளை (21.11.2023) திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் (22.11.2023) தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் மிகப் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையை விட்டு விலகிய புயல்; சில மணி நேரத்தில் மின்சார சேவை

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

 Storm left Chennai; Electricity service within hours

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தின இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

 

நேற்று முற்பகல் சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்த புயல் ஆனது தீவிரப் புயலாக வலுப்பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 2:30 மணி அளவில் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த புயல், தற்போது சென்னையை விட்டு விலகி 170 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்றது. சென்னையில் இருந்து வடகிழக்கில் 170 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இப்புயல் இன்று முற்பகல் ஆந்திரா அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் இருந்து புயல் விலக்கிச் சென்றதால் சென்னையில் வெகுவாக மழை வாய்ப்பு குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 2.30 மணி நிலவரப்படி ஆறு மணி நேரமாக 7 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து வருவதாக கணிப்புகள் தெரிவித்துள்ளன. புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ள நிலையில், சென்னையின் அனைத்து பகுதிகளிலும் அடுத்த சில மணி  நேரங்களில் மின்சாரம் படிப்படியாக வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

குளமாகிய சிவானந்தா சாலை; மழைநீரில் மூழ்கிய கார் 

Published on 04/12/2023 | Edited on 04/12/2023

 

 Pond Sivananda Road; A car submerged in rainwater

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக 23 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி 'மிக்ஜாம்' புயல், புயல் என்ற நிலையில் இருந்து தீவிரப் புயலாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது புயல் மையம் கொண்டுள்ளது.  

 

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிவானந்தா சாலையில் அதிக அளவிலான மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியே குளம் போல காட்சியளிக்கிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்த வழியாக யாரும் போக்குவரத்து மேற்கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை மீறி ஒருவர் காரை செலுத்திய நிலையில் வெள்ளத்தில் கார் சிக்கியது. இதனால் அந்த கார் மூழ்கும் நிலை ஏற்பட்டது. அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்