அடுத்த 24 மணிநேரத்தில்தமிழகத்தில் பல இடங்களில் மின்னலுடன் கூடியகனமழை பொழிய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக,நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் இடியுடன் கூடியகனமழை பொழிய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் லேசான மழையும், தென்கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும்பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல்நாளை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர்,கள்ளக்குறிச்சி,அரியலூர்,புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஒரு சிலப்பகுதிகளில் லேசான மழைக்குவாய்ப்பிருக்கும் எனவும்சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.