
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. காலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டாலும், தொடர்ந்து நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
மாலையில் கருமேகம் சூழ்ந்து குளிர்ச்சி நிலவியது. அடுத்து கரூர் மாநகராட்சி உட்பட்ட ஜவஹர் பஜார், சுங்ககேட், காந்திகிராமம், பஞ்சப்பட்டி, வேலாயுதம்பாளையம், மாயனூர் ,அரவக்குறிச்சி, பசுபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கொட்டித் தீர்த்த கனமழையால் கழிவு நீருடன் வெள்ள நீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரவு நேர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு கனமழை பெய்தது. இதனால் கரூர் நகரப் பகுதியில் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது ஒரு புறமிருந்தாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.