Advertisment

கொட்டித் தீர்த்த மழை...இடிந்து விழுந்த சுவர்...பச்சிளம் குழந்தை உட்பட 3 பேர் பலி!

கடலூர் திருப்பாதிபுலியூர், கம்மியம்பேட்டை பகுதியில் உள்ள சுசிலா நகர் ரயிஸ்மில் தெரு பகுதியை சேர்ந்த நாராயணன், தனது மனைவி மாலா, மருமகள் மகேஷ்வரி பேத்தி தனஶ்ரீ, யுவஶ்ரீ உட்பட 6 பேருடன் சிமெண்ட் ஷீட் பொருத்திய வீட்டில் வசித்து வந்துள்ளார்.

Advertisment

house collapsed

இந்த நிலையில் இன்று இரவு பெய்த தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் மாலா,மகேஷ்வரி மற்றும் பச்சிளம் பெண் குழந்தை தனஶ்ரீ ஆகிய 3 பேர் உயிர் இழந்தனர்.

Advertisment

சுவர் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இடிந்து விழுந்து கிடந்த சுவற்றை அப்புறப்படுத்தி சுவற்றின் அடியிலிருந்த நாராயணன், ரஞ்சிதா, யுவஸ்ரீ ஆகிய மூன்று பேரை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, உயிரிழந்த மாலா, மகேஸ்வரி, தனுஸ்ரீ ஆகியோரின் உடல்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். நல்லிரவில் நடைபெற்ற இந்த கோரச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

rain heavy rain building Collapsed house
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe