வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் பல்வேறு இடங்களில் மழை பொழிந்து வருகிறது. இந்தநிலையில் புதுச்சேரியில் கனமழை காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி இன்று அதிகாலை முதல் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது. இந்தநிலையில் கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரியின் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.