தமிழகத்தில் நாளை கனமழை - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

 Heavy rain in Tamil Nadu tomorrow - India Meteorological Department information

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக நேற்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடுகாரணமாகதமிழ்நாட்டில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இன்று முதல் வரக்கூடிய ஐந்து தினங்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை தமிழகத்தில் கனமழை இருக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. குறிப்பாக தமிழகத்தினுடைய கடலோர மாவட்டங்கள்,உள் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

rain weather
இதையும் படியுங்கள்
Subscribe