சென்னையில் மீண்டும் கனமழை

 Heavy rain again in Chennai

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர், புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் பல இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீரை வடிக்க பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று மாலை சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் சென்னையில் பல பகுதிகளில் கனமழை துவங்கியுள்ளது. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், எம்.ஆர்.சி நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினம்பாக்கம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணிஆகிய பகுதிகளில் தற்போது காற்றுடன் கன மழை பொழிந்து வருகிறது.

Chennai weather
இதையும் படியுங்கள்
Subscribe