Advertisment

கனமழை எதிரொலி; கர்ப்பிணி பெண்களுக்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை ஏற்பாடு

Heavy rain echoes; Precautionary measures taken for pregnant women in thoothukudi

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன் தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டும், மாற்று பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனை தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக தமிழக அரசு சார்பில்பல்வேறு முன்னச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புபணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியிருந்தார். இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் திருநெல்வேலி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைஎடுத்து வருவதாக கூறியிருக்கிறார். அந்த வகையில், அம்மாவட்டத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மகப்பேறு தேதியுள்ள 24 கர்ப்பிணி பெண்கள்முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

thirunelveli Rainfall rain
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe