Advertisment

கனமழை எதிரொலி; ஒருநாள் இரவில் எகிறிய தக்காளி விலை

Heavy rain echoes; Mouth-watering tomato prices

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடை இருக்கிறது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் அக்டோபர் 16ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிக கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஏற்கனவே சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது. இன்றைய தினத்தைப் பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதேபோல் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டையிலும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பாகவே தமிழகத்தில் பரவலாக மழைஇருந்ததால்தக்காளி விலை சற்று அதிகரித்து இருந்தது. இந்நிலையில் நேற்று கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி சென்னை கோயம்பேடு சந்தையில் 120 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோயம்பேடு சந்தைக்கு தினசரி 1300 டன் தக்காளி வருவது வழக்கம். தற்பொழுது பெய்து வரும் கனமழை காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்தது வெறும் 800 டன் மட்டுமே வந்துள்ளதால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது. கோயம்பேட்டிலேயே ஒருகிலோ தக்காளி 120 ரூபாய் என்ற நிலையில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

tomato vegetables weather
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe