கனமழை எதிரொலி; மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

NN

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாகக்கன மழை பொழிந்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 60 அடியைத்தாண்டி உள்ளது. இன்று (15/11/2023) காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60.41 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,327 கன அடியிலிருந்து 3,320 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 24.994 டிஎம்சி ஆக உள்ளது.

Tamilnadu weather
இதையும் படியுங்கள்
Subscribe