கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறையில் 4.5 செ.மீ மழை பெய்துள்ளது. இதையடுத்து கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கோவை மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.