கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கடந்த ஒரு சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து நீலகிரியில் உள்ள உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று (07.07.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.