தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், சென்னை உள்படத் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதி கனமழை பொழிந்தது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. பல இடங்களில் பிரதான சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.

Advertisment

இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பத்தில் பெய்த கனமழை காரணமாகமுல்லை பெரியாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் ஆற்றங்கரை ஒட்டியுள்ள பகுதி மக்களுக்கு எச்சரிக்கையானது கொடுக்கப்பட்ட வருகிறது.ஆற்றில் இறங்கவும் குளிக்கவும் கால்நடைகளை கழுவவும் கூடாது என அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.