வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் தமிழகம், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பொழியும். சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை தொடரும்.
கடந்த 24 மணி நேரத்தில் தாராபுரத்தில் அதிகபட்சமாக 15 செண்டி மீட்டர் மழையும், தென்காசி ஆயக்குடியில் 12 செண்டி மீட்டர் மழையும், சங்கரன்கோவில்-11, தென்காசி-10, சிவகிரி-8, பாம்பனில்-7 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.