Published on 28/09/2020 | Edited on 28/09/2020

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் சாரல் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகக் கடலூர், நீலகிரி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் அனகாபுத்தூர், குரோம்பேட்டை, கே.கே.நகர், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதியில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் கிண்டி, மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், அடையாறு, மேற்கு மாம்பலம் பகுதியிலும் மழை பொழிந்து வருகிறது. அசோக் நகர், தரமணி, வேளச்சேரி, பெருங்குடி, வடபழனி, சைதாப்பேட்டை, கோடம்பாக்கத்திலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.