Heavy rain awaits Tamil Nadu on the 20th

தமிழகத்தில் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

ஏற்கனவே தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என்றும் இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக மாறலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Advertisment

இதன் காரணமாகத்தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்று முதல் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. மேலும், 19 ஆம் தேதியும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம் என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில் வரும் டிச.20ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் 20ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

Advertisment