Advertisment

ஆசனூரில் பலத்த மழை; முறிந்த மரங்களால் மின்வெட்டு

Heavy rain in Asanoor; Power outage due to fallen trees

ஆசனூர்- கொள்ளேகால் சாலையில் தரைப் பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விடிய விடிய மின்சாரம் இல்லாமல்மலைக்கிராமமக்கள் தவித்தனர்.

Advertisment

தாளவாடி அடுத்துள்ளஆசனூர்சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 3 முதல் 5 மணிவரைகுளியாடா,திம்பம்,ஒசட்டி,தேவர் நத்தம்,மாவள்ளம்மற்றும் வனப்பகுதியில் பலத்த மழை கொட்டியது.பலத்த மழை காரணமாக வனப்பகுதிகளில் உள்ள ஓடைகள், பள்ளங்கள் மற்றும் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் பலத்த மழையால்ஆசனூரில்இருந்து கர்நாடக மாநிலத்தை இணைக்கும், கொள்ளேகால் சாலைஅரேப்பாளையம்பிரிவு அருகே உள்ள தரைப்பாலத்தைக்காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தது.

Advertisment

இரவு 7 மணி முதல் நீர் பாலத்தைமூழ்கடித்துச்சென்றதால் அப்போது முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாககேர்மாளம்,குளியாடா,மாவள்ளம்,கானக்கரை,தேவர் நத்தம்மற்றும் கர்நாடகமாநிலத்தைச்சேர்ந்த 100க்கும் மேற்பட்டமலைக்கிராமங்களுக்குப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால்மலைக்கிராம மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். வெள்ளம் வடிந்த பிறகு வாகனங்கள் செல்லும். அதேபோல்சீவக்கம்பள்ளம்அருகே மின் கம்பி மீதுமூங்கில்மரம் முறிந்து விழுந்ததால்50க்கும்மேற்பட்டமலைக் கிராமங்களில்மாலை 3 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

விடிய விடிய மின்சாரம் இல்லாமல்மலைக்கிராமமக்கள் கடும்அவதிப்பட்டனர். குழந்தைகளைவைத்துக்கொண்டு பெண்களும் கடும் அவதிக்கு உள்ளாகினர். அதே போல் தாளவாடிசுற்றுவட்டாரப்பகுதிகளானஎரகனள்ளி,சிமிட்டள்ளி,ஜீர்கள்ளி,கல்மண்டிபுரம், போன்ற பகுதிகளில் மதியம் 4 மணி முதல் 5 மணி வரை மிதமான மழை பெய்தது.

Erode rain
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe