தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைபொழித்து வரும் நிலையில் பல இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் கோவை மாவட்டம் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.