Heavy rain again; Announcement for Cuddalore

தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழையானது பொழிந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை சென்னை உட்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அறிவிப்பின்படி சிவகங்கை, செங்கல்பட்டு, கரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் புதுவை ஆகிய இடங்களில் இரவு 7:00 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 சென்டிமீட்டர் அளவிற்கு அதிகனமழை கொட்டி உள்ளது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. விழுப்புரத்தில் ஏற்கனவே 41 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்த நிலையில் மீண்டும் அங்கு கெடார் பகுதியில்41 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூரில் 33 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் 32 சென்டிமீட்டர் என ஒட்டுமொத்தமாக கடந்த 24 மணி நேரத்தில் 22 இடங்களில் அதிக கனமழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

கடலூரில் மீண்டும் பல இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிஞ்சி நகர், முல்லை நகர், குண்டு சாலைஉள்ளிட்டபகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பல இடங்களில் மழை நீர் வடியாத நிலையில் நாளையும் (03/12/2024) கடலூரில்பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஅறிவித்துகடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவுவெளியிட்டுள்ளார்.

Advertisment