தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை!

Heavy rain for 3 days in Tamil Nadu

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிகக்கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாகத்தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நவம்பர் 22, 23 மற்றும் 24 ஆகிய மூன்று நாட்கள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே சமயம் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain weather
இதையும் படியுங்கள்
Subscribe