Skip to main content

13 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

Heavy rain in 13 districts ... Meteorological Center announcement

 

தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (01.07.2021) 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தர்மபுரி, விருதுநகர், சேலம் மாவட்டங்களில் கனமழை இருக்கும். அதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம். தமிழ்நாட்டில் ஜூலை மூன்றாம் தேதிவரை கனமழையும், 4 மற்றும் 5ஆம் தேதிவரை மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்