thiruchy

Advertisment

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் கூடுவது வழக்கம். கரோனா தொற்றை கருத்தில்கொண்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறை மற்றும் காவிரி ஆற்றில் உள்ள அனைத்து படித்துறைகளிலும் மக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் யாரும் இன்றி படித்துறைவெறிச்சோடியது. மேலும் காவல்துறையினர் அனைத்து படித்துறைகளிலும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். ஒரு சிலர் தகவல் தெரியாமல் வரும் பட்சத்தில் அவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி திருப்பி அனுப்பப்படுகின்றனர்.